லண்டன் பல்கலைகழகத்தில் இஸ்ரவேல் தூதுவரின் விரிவுரைக்கு பாரிய எதிர்ப்புபிரித்தானியாவில் உள்ள இஸ்ரவேல் தூதுவரினால் லண்டன் நகர்  பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படவிருந்த விரிவுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டன் நகரில் வசிக்கும் பலஸ்தீன் ஆதரவாளர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவுக்கான இஸ்ரவேல் தூதுவர் மார்க் ரெகெவ் என்பவர் குறித்த பல்கலைக்கழகத்தில் இனவாதமும், நிற முரண்பாடுகளும் எனும் தலைப்பில் உரையாற்றவிருந்தார். இதற்கான ஏற்பாட்டை அப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சபை மேற்கொண்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பல்கலைக்கழகத்தில் இனவாதம், நிறவாதம் என்பவற்றைப் பற்றிப் பேசுவதற்கு இஸ்ரவேல் தூதுவருக்கு எந்தவித தகுதியும் கிடையாது எனவும், இவரை உரைநிகழ்த்த இடமளிக்க மாட்டோம் எனவும் கோஷம் எழுப்பியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

DAILY CEYLON