இலங்கை வரலாற்றில் முதன் முறையாக முஸ்லிம் ஒருவர் இளவயதில் வைத்திய நிருவாகசேவையில்!இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இள வயதில் வைத்திய நிருவாக சேவையில் சித்தியடைந்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

அக்கரைப்பற்றைச்சேர்ந்த வைத்தியர் மசூத் நேற்று வெளியாகிய வைத்திய நிருவாக சேவையில் சித்தியடைந்து தனது இளவயதில் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார், இது இலங்கை வரலாற்றில் இளவயதில் சித்தியடைந்து இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி சிலோன் முஸ்லிம் வைத்தியர் மசூதிடம் வினவிய போது,

முதலில் இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தாலுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்,

முயற்சி செய்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற கோட்பாட்டுக்கமைய அதிக கஸ்டங்கள் தாங்கி இந்த சுமையை துாக்கி இறைவன் உதவியோடு வெற்றி பெற்றுள்ளேன், இது எனக்கு மட்டு உரித்தான வெற்றியல்ல, மாறாக முழு இலங்கை முஸ்லிம்களுக்குமான வெற்றி, மாலை நேர டிஸ்பன்சரி இல்லாத வைத்தியர்களுள் நானும் ஒருவர், அரச சேவையை உளத்துாய்மையுடன் செய்ய வேண்டும் ஆசைப்படும் ஒருவர் என்ற அடிப்படையில் இந்த வெற்றி எனக்கு இறைவன் தந்துள்ளான்.

இப்படியான வெற்றிகள் உங்களையும் வந்து சேரும் அதற்கு இறை பொருத்தம் அவசியம், அடுத்து அதிக முயற்சி செய்ய வேண்டும். என்றார்.

பணி தொடர சிலோன் முஸ்லிமின் வாழ்த்துக்கள்