நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு நாளை முதல் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்நாடு முழுவதும் பெரும்பாலும் நாளை (30) முதல் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மாகாணங்களில் மாலை 2.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு முதல் காலி வரையான கடல் ஓரப் பகுதிகளில் காலை நேரத்திலும் மழை எதிர்பார்க்கலாம் எனவும் மேலும் திணைக்களம் கூறியுள்ளது.