பொலிஸ் சீருடையின் நிறம் மாற்றப்படவுள்ளது - பூஜித ஜெயசுந்தரசிறிலங்கா காவல்துறை சீருடையை நீல நிறத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறையினரின் தற்போதைய “காக்கி” சீருடைக்குப் பதிலாக நீல நிற சீருடையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். உலகின் பல்வேறு நாடுகளில் காவல்துறை சீருடை நீல நிறத்திலேயே இருக்கிறது. அந்த வகையில் சிறிலங்கா காவல்துறையின் சீருடையும் நீல நிறத்துக்கு மாற்றப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.