சீனாவில் அதிரடி தடைசீனாவின் ஜிங்ஜியாங் மாகாணம் பெரும்பான்மையும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியாகும். தொழுகை முதல் ஆடை வரையில் பல்வேறு விவகாரங்களுக்கு சீன அரசின் உத்தரவைதான் இங்கு வாழும் மக்கள் பின்பற்ற வேண்டும்.
சின்ஜியாங் மாகணத்தில் உய்கர் இஸ்லாமியர்கள் சீன அரசின் அடக்குமுறையின் கீழ் உள்ளனர். அங்கு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என சீன ராணுவம் அவ்வபோது நடவடிக்கையையும் முன்னெடுக்கிறது.
இந்நிலையில், இந்த மாகாணத்தில் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் சிலவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம், குர்ரான், மெக்கா, ஜிகாத், இமாம், சதாம், ஹஜ் மற்றும் மதினா என்பன உள்பட 12 பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.