பெற்றோலிய தொழிற்சங்கங்களுடன் சந்திப்புக்கு தயார்; பிரதமர் ரணில்பெற்றோலிய தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அவர்களது பிரச்சினைகளை கலந்துரையாட பிரதமர் சந்தர்ப்பம் வழங்கியுள்ளார்.

அதன்படி, இந்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோலிய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது