இறக்காமத்திற்கு வருகை தந்தார் ஞானசார மாணிக்கமடு பிரதேசத்தில் பதற்றம்


எஸ்.எம். சன்சீர்

இன்று காலை 10 மணியளவில் இறக்காமம் மாயக்கல் மாணிக்கமடு பிரதேசத்திற்கு வருகை தந்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இங்கிருக்கின்ற மலைகளுக்கு சென்று அங்கு மலையில் ஏறியது மாத்திரமில்லாமல் அவரோடு வந்த சிங்கள  மக்களோடு பேசி ஒரு சில விசமக் கருத்துக்களை பரப்பியதாக எமது செய்தியாளர் சற்று முன் தெரிவித்தார்.

இறக்காமம் மாயக்கல்லி பிரதேசத்தில் அமைக்கப்பட இருக்கின்ற விகா அமைப்பிற்கு முற்று முழுதாக ஆதரவை கூறுகின்ற பொதுபலசேனா அமைப்பு நேரடியாக களத்தில் இறங்கி இருப்பது நல்லாட்சிக்கு அநீதி என்றுதான் கூற வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய முஸ்லிம்கள் பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.

பொதுபலசேனா இந்த அரசாங்கத்தில் மீண்டும் தலையிட்டு இருப்பது மக்கள் மத்தியில் கவலையை உண்டாக்கி இருக்கின்றது. நல்லாட்சி அரசானது பொதுபலசேனா அமைப்பை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் இன்று விஜயம் செய்து கட்டாயம் இந்த பகுதியில் விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தில் பேசியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மாணிக்கமடு சிலை மாயக்கல்லி விகாரை விவகாரத்தில் பொதுபலசேன முக்கிய பங்கை கொண்டிருப்பது மக்களை கேள்விக்குள் ஆழ்த்துகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் எமது தளத்தில் வெளியிடப்படும்.