ஜனாதிபதி தலைமையில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகியது

ஜனாதிபதி ஊடகப்பிரிவு மற்றும் சிலோன் முஸ்லிம் கொழும்பு செய்தியாளர்
“இஸ்லாமிய யதார்த்தமும் சமகால சவால்களும்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச இஸ்லாமிய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியது
இன்று காலை 9.30 மணிக்கு அலரிமாளிகையில் ஆரம்பமாகிய அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார் சபாநாயகர் கருஜயசூரிய கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்
மேலும் இம்மாநாட்டில் நாற்பது நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள், துறைசார் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம், சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரம் தஃவா மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சுடன் இணைந்து நடத்தும் குறித்த மாநாட்டின் ஏனைய அமர்வுகள்  நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.