எரிபொருள் விநியோகம் இன்று வழமைக்கு திரும்பியுள்ளது
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று பிற்பகல் அளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஷெஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் 12 மணியளவில் நூற்றுக்கு 80 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என எமது செய்திச் சேவைக்கு அவர் தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலையில் , கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியசாலைகளில் இருந்து சுமார் 100க்கும் அதிகமான பவுஸர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.