யாசகத்தில் ஈடுபவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
கொழும்பு நகரத்தில் யாசகத்தில் ஈடுபவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பில் யாசகத்தில் ஈடுபடுபவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் ஹம்பலாந்தோட்டை – ரிதியகம பிரதேசத்தில் உள்ள தடுப்பு நிலையத்திற்கு கொண்டுச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்பொருட்டு ரிதியகம பிரதேசத்தில் குறித்த மத்திய நிலையத்தை அமைக்கும் பணியின் பொருட்டு முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபாகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்தார்.
Powered by Blogger.