விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்? அலறியடித்து ஓடிய பயணிகள்சிரியாவில் உள்ள விமான நிலையத்தில் சற்று முன்னர் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பயணிகள் அனைவரும் அலறியடித்து வெளியேறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள Damascus விமான நிலையத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிரியாவின் தலைநகரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. எனினும், இது விபத்தா அல்லது வெடிகுண்டு தாக்குதலா என்பதை அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை.

வெடிச்சத்ததை தொடர்ந்து மிகப்பெரிய நெருப்பு பிழம்பாக பரவிய இவ்விபத்தை விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி காரணங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும், விமான நிலையத்திற்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வரும் வேளையில் இது தீவிரவாதிகள் அல்லது கிளர்ச்சியாளர்களின் நாச வேலையா என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.