வடகொரியா இன்றும் ஏவுகணைப் பரிசோதனை நடத்தியுள்ளது - டிரம்ப் கண்டனம்வடகொரியா மீண்டும் பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனையை இன்று(29) நடத்தியுள்ளதாக தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணை மேலெழும்பிய சில நொடிகளில் வெடித்து சிதறியுள்ளதாக தென் கொரியா இராணுவம் குறிப்பிட்டுள்ளதாக யன்ஹப் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

வட கொரியாவின் எல்லையை ஏவுகணை தாண்டவில்லை என அமெரிக்க இராணுமும் அறிவித்து்ளளது. இருப்பினும், இது என்ன வகையான ஏவுகணை என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லையெனும் கூறப்படுகின்றது.

”தோல்வியில் முடிந்திருந்தாலும் கூட ஏவுகணை செலுத்தியதன் மூலம் சீனாவின் விருப்பத்தையும் பெரிதும் மதிக்கக் கூடிய அந்நாட்டு ஜனாதிபதியையும் வட கொரியா அவமதித்துள்ளது. இது மோசமான ஒரு நிலைமை என்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதுவரை வட கொரியா ஏவுகணை சோதனை குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.