துருக்கி கடலில் கப்பல்கள் மோதி பயங்கர விபத்து: மூழ்கியது ரஷ்ய போர்க்கப்பல்

துருக்கி கடற்கரையில் ரஷ்யப் போர்க்கப்பல் மற்றொரு கப்பலுடன் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சேதமடைந்த ரஷ்யப் போர்க் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

Istanbul அருகே குறித்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கால்நடைகளை சுமந்துகொண்டு டோகோவுக்குப் சென்றுக்கொண்டிருந்த அஷோட் -7 என்ற கப்பலுடன் ரஷ்ய போர்க்கப்பல் மோதியுள்ளது.

முன்னதாக, விபத்தையடுத்து 15 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கப்பலில் இருந்த 78 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளதாக துருக்கி கரையோர பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மற்றொரு கப்பலுடன் ஏற்பட்ட மோதலே விபத்திற்கு காரணம் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்தையடுத்து மீட்பு பணிக்காக மற்றொரு ரஷியன் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் சம்பவயிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மூடுபனி மற்றும் குறைந்த பார்வைத்திறன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கப்பல் முகவர் ஜிஏசி தெரிவித்துள்ளது.

Lankasri