அக்கரைப்பற்று சந்தையில் இருக்கும் விகாரைக்கு பொதுபலசேனா அடுத்தவாரம் வருகிறது


அக்கரைப்பற்று சந்தைக்கு அருகாமையில் இருக்கும் ஸ்ரீ விஜயராம மஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பொதுபலசேனா - ஞானசார தேரர் சிங்கள இணையம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தை பரப்புவதற்கானதும் விகாரைகளை புணரமைப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில் வருகை தரவுள்ளதாக குறிப்பிட்டார். அக்கரைப்பற்று விகாரையில் அதிக பௌத்த நிகழ்வுகளை நடாத்தவும் அதற்கான செலவுகளை பொறுப்பேற்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர மணிக்கூட்டு கோபுர புணரமைப்பு, பௌத்த துாபி வடிவிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் உச்சி புணரமைப்பை செய்த இராணுவத்தினருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டதிலுள்ள அனைத்து விகாரை மற்றும் பௌத்த நிலையங்களுக்கும் விஜயம் செய்ய வுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.