இறக்காமம் மாணிக்கமடு சிலை வைப்பை தடுப்பது தொடர்பான சந்திப்பு இன்று
இறக்காமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் அத்து மீறிய சிலை வைப்பு சம்மந்தமாகவும் அத்து மீறிய காணி சுவிகரிப்பு செய்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவது தொடர்பாகவும் இச்சம்பவங்களுக்கு எதிராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் மேற்கொண்டு வருகின்ற, மேற்கொள்ள இருக்கின்ற விடயம் பற்றிய மக்கள் சந்திப்பு  இன்று (30)  இறக்காமம் ஜாமிய்யதுத் தைக்க பள்ளிவாயலில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களது தலமையில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரசின் திகாமடுலை மாவட்ட அரசியல் பிரதிநிதிகளும், உயர் அதிகாரிகளும் ஊர் மக்களும் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவிக்கையில் கடந்த வெள்ளி அன்று  ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக இதற்கான ஒரு சுமுகமான நீதி எமதுசமூகத்திட்க்கு கிடைக்க வோண்டும் என்பதனை எடுத்துக்கூறியிருக்கின்றோன் என்ற விளக்கமளித்ததுடன், இப்பிரச்சினையை இனப்பிரச்சினையில் இருந்து பாதுகாத்து இலகுவாக தீர்பது தொடர்பான வழி முறைகளையும் பொது மக்களுக்கு விளக்கமளித்துச் சென்றாற்.

எஸ்.எம்.சன்சீர்
விஷேட செய்தியாளர்
இறக்காமம்