மீதொட்டமுல்ல குப்பை மேடு: ஜப்பானிய நிபுணர்கள் கூறிய முக்கிய விடயங்கள்மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான அறிக்கையை ஜப்பானிய நிபுணர் குழு , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்தது.
நிபுணர் குழுவின் தலைவர் மிட்சுடாகி நுமஹாடா குறித்த அறிக்கையை கையளித்ததுடன், தமது பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தார். எதிர்வரும் மழைக்காலத்துக்கு முன்னர் குப்பையானது புவியீர்ப்புக்கு ஏற்ப மலை போல் குவிக்கப்படவேண்டுமென குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 3-R எனப்படும் reduce, reuse and recycle  அதாவது குறைத்தல், மீள்பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி முறைகள்  மூலம் குப்பைகளை அகற்றுவதற்கான நீண்டகால திட்டமொன்றையும், அவற்றை சக்திப் பயன்பாடு மற்றும் பசளைகளுக்கு உபயோகப்படுத்தல் தொடர்பான முன்மொழிவுகளையும் குறித்த நிபுணர் குழு மேற்கொண்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி அக்குழுவுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.