பிரபல ஊடகவியலாளர் நாச்சியாதீவு பர்வீனின் தந்தை காலமானார்


தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த நாச்சியாதீவு பர்வீன் அவர்களின் தந்தை அப்துல் ரஹீம் இன்று வியாழக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜியூன்.
மரணிக்கும்போது அவருக்கு வயது 67. அவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை வெள்ளிக்கிழமை 10 மணிக்கு நாச்சியாதீவு புதியநகரில் நடைபெறும்.
இவர் அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியில் பயிற்றப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியாக பணியாற்றி பின்னர், அதிபர் பதவியேற்று ஓய்வுபெற்றார்.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் காலமடைந்துள்ளார்.
அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதோடு, மறுமையில் சுவனம் கிடைப்பதற்கு பிரார்த்திப்போம்.

தகவல் : பிறவ்ஸ்