வரிபத்தான்சேனையில் GAFFED அமைப்பினால் மாபெரும் கெளரவிப்பு விழாஎஸ்.எம்.சன்சீர்

இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வரிபத்தான்சேனை எனும் கிராமத்தில் GAFFED அமைப்பினூடாக மாபெரும் கெளரவிப்பு விழா அண்மையில் வரிப்பத்தான்சேனை அஸ்றப் ஞாபகர்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இவ்வமைப்பின் தலைவர் ஏ.ஜே.எம்.சஜாத் தலைமயில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்விப்பணிப்பாள் எம்.டி.அப்துல் நிசாம் அவர்களும் ஏனைய விசேட அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள். இதன்போது வரிப்பத்தான்சேனை மண்ணுக்கு  பெருமை தேடித்தந்த  கல்விமான்கள்,சட்டத்தறனி,அதிபர்கள்,வைத்தியர்கள்,தாதியர்கள்,உள்வாரி வெளிவாரி பட்டதாரிகள் என 72 பேர்கள் இவ்விழாவில் பாராட்டி கெளரவிக்கப்பட்டமை குறுப்பிடத்தக்கது.