பெற்றோல்களுக்கு பஞ்சம் இல்லை IOC நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது



வழமை போன்று தமது நிறுவனம் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் என இந்தியன் ஓயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமது நிறுவனத்தின் கீழ் நாடு பூராகவும் உள்ள 202 எரிப்பொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக நாட்டின் எரிப்பொருள் தேவையில் 18 வீதத்தை வழங்க முடியும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட உபத் தலைவர் பீ.பீ.பவித்ரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் மாத்திரமே தமக்கு எரிப்பொருள் களஞ்சியசாலை காணப்படுவதாகவும், ஆனால் அரசாங்கத்தின் கீழ் அவ்வாறான 12 எரிப்பொருள் களஞ்சியசாலைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியன் ஒயல் நிறுவனத்திடம் தற்போது 20 ஆயிரம் கிலோ லீற்றர் டீசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று இந்தியன் ஒயில் நிறுவனம் வசம் 11 ஆயிரம் கிலோ லீற்றர் பெற்றோல் காணப்படுகின்றது.
இவற்றை கொண்டு 15 நாட்கள் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க நிறுவனங்களுக்கு இதுவரை எரிப்பொருள் விநியோகிக்கப்படவில்லை எனவும், கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் எரிப்பொருளை விநியோகிக்க தாம் தயார் எனவும் இந்தியன் ஒயில் நிறுவனம் அறிவித்துளளது.

எரிப்பொருள் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் ஒரு வார காலத்திற்குள் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து அதனை பெற்றுத்தர முடியும் என நிறுவனத்தின் சிரேஷ்ட உபத் தலைவர் பீ.பீ.பவித்ரா தெரிவித்துள்ளார்.