அட்டாளைச்சேனையில் நேற்று இடம்பெற்ற NFGG யின் மக்கள் சந்திப்புநல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் மக்கள் சந்திப்பும் கலந்துரையாடலு நேற்று  அட்டாளைச் சேனையில் இடம் பெற்றது. பிற்பகல் 04.00 மணிக்கு அட்டாளைச்சேனை தைக்கா நகரில் அமைந்துள்ள OSRA மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது NFGG யின் அட்டாளைச்சேனை பிரதேச செயற்குழு உறுப்பினர் நவ்சாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அதன் பிரததித்தவிசாளர் சிறாஜ் மசூர் மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நழிமி ஆகியோர் கலந்து கொண்டு உரைகளை ஆற்றினர்.

தற்கால அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் எவ்வாறான ஒழுங்கு முறைகளைக் கொண்ட அரசியல் தீர்வினை உருவாக்குவதற்கு NFGG பாடுபட்டு வருகின்றது என்ற விடயங்களை இங்கு உரையாற்றியவர்கள் தெளிவு படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து NFGG யின் அரசியல் வேலைத்திட்டங்களை அம்பாரை மாவட்டத்தில் பரவலாக்கி முன்னெடுப்பது தொடர்பான விரிவான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர் MACM ஜவாஹிர் உட்பட இன்னும் பல முக்கியஸதர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.