ஞானசார தேரர் இறக்காமம் விஜயம்; நடந்தது என்ன??? (UPDATE)


எஸ்.எம். சன்சீர்

இன்று இறக்காமத்திற்கு விஜயம் செய்த ஞானசார தேரர் மற்றும் ஏனைய தேரர்கள் அம்பாறை கச்சேரியில் அரசாங்க அதிபருடன் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 

அக் கூட்டத்தில் விகாரை அமைப்பதற்கு மலையிலிருந்து கீழே இரண்டரை ஏக்கர் காணி வழங்குவதாகவும் அதற்கு பதிலாக மாற்றுக் காணி வழங்குவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து இருக்கின்றார்.

மேலும் முஸ்லிம்கள்  இங்கு எப்போது குடியேற்றமானார்கள்  இதற்கு முன் யார் இங்கு இருந்தார்கள் என்பன தொடர்பான ஆதாரம் எங்களிடம் உள்ளது. இவர்கள் எப்படி இங்கே உரிமை கொண்டாட முடியும். என்றெல்லாம் பல கேள்விகளை ஞானசார தேரர் எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக மே 01 திகதி உத்தியோகபூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொள்வோம்  என ஞானசார தேரர் கூறி விட்டு சென்றிருக்கிறார்.