இலங்கைக்கு 10 எண்ணெய் களஞ்சியங்கள்!!
இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த, திருகோணமலையில் உள்ள, 10 எண்ணெய் களஞ்சியங்கள், இலங்கைக்கு மீண்டும் வழங்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை ஒன்றிற்கு அமைவாக குறித்த எண்ணெய் களஞ்சியங்கள் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை, மற்றும் இந்தியா இணைந்து,விரைவில் எண்ணெய் களஞ்சியங்களை பயன்படுத்துவதற்கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது