மராவி நகரில் தொடரும் மோதல்- இதுவரை 100 பேர் பலிஃபிலிப்பின்ஸின் மராவி நகரில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்துக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் இடையில் இந்த மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த மோதல்களில் இதுவரையில் 100 பேர் பலியானதாகவும், அவர்களில் 19 பேர் பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களாக இடம்பெறும் இந்த மோதல்களால், ஆயிரக்ககணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தீவிரவாதக் குழுக்களின் தலைவர் ஒருவரை இராணுவம் கைது செய்ய முயற்சித்த போது, இந்த நகருக்குள் புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்த போராளிகள் சிலர் பலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நகரில் அந்த நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடெர்டே, இராணுவச் சட்டத்தை அமுலாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.