ஈராக் நாட்டில் வான் தாக்குதலில் 105 பொது மக்கள் கொல்லபட்டுள்ளனர்!!ஈராக் நாட்டில், கடந்த மார்ச் மாதம், ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் மீது அமெரிக்க மேற்கொண்ட விமான தாக்குதலில், 105 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பெண்டகன் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளிடமிருந்து மொசூல் நகரை மீட்பதற்காக உள்நாட்டு படைகளுடன் இணைந்து, அமெரிக்க இராணுவத்தினரும் போரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அந்நாட்டின் வட மேற்கு நகரங்களை தங்கள் வசம் வைத்துள்ள, ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளை  அழிக்க வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, மயாதீன் பகுதியில் அமைந்துள்ள, கட்டடமொன்றில் தீவிரவாதிகள்  பதுங்கி இருப்பதாக கூறி  அமெரிக்கா  மேற்கொண்டிருந்த தாக்குதலில் குறித்த கட்டடத்தின் கீழ் பகுதியில் வசித்த பொது மக்கள் 105 பேர் கொல்லப்பட்டுள்ளதாக  அமெரிக்க இராணவத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.