May 6, 2017

வாயு கசிவால் 110 குழந்தைகள் மயக்கம்!!




வாயு கசிவு ஏற்ட்டதால் டெல்லியில் உள்ள பாடசாலை ஒன்றில் 110 குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர்.

விடுதி வசதியுடன் கூடிய டெல்லியின் துக்ளகாப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இருந்த கெமிக்கல் கென்டெய்னரில், வாயு கசிந்துள்ளது.இதனால் அங்கிருந்த குழந்தைகள் மயக்கமடைந்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்,குழந்தைகளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


வாயு கசிவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் பாதுகாப்பு கருதி பாடசாலையில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network