பாபர் மசூதி வழக்கில் அத்வானி உள்ளிட்ட 12 பேர் கைதுபாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி மீது சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 

பாபர் மசூதி வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி லக்னோ சிறப்பு சி.பி.ஐ., கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் ஆஜரானார்கள். இந்த வழக்கில் அவர்களுக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது. 

வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் மீது 120(பி) சட்டப்படி கிரிமினல் சதி பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

நன்றி தினமலர்