கல்வியமைச்சினால் 16 பாடசாலை அதிபா்கள் மே 7ஆம் திகதி சீனாவுக்கு பயணமாகின்றனா்

(அஷ்ரப். ஏ .சமத்)

கல்வியமைச்சினால் தெரிபு செய்யப்பட்ட பாடசாலை அதிபா்கள் 16 பேர் 20 நாட்களுக்கு  கல்விக்கருந்தரங்கில் பங்குபற்றுவதற்காக சீனா நாட்டுக்கு மே 7ஆம் திகதி - மே 27ஆம் திகதி வரை பயணமாகின்றனா். இவா்களுக்கான விசா, டிக்கட் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (4) கல்வியமைச்சில் நடைபெற்றது.  கல்வியமைச்சா் அகில்விராஜ் காரியவாசம் இவா்களுக்கான தஸ்தவேஜ்சுகளை கையளித்தாா்.

இவா்கள் சீனா கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊடகாக சினாவின் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு பாடசாலைக் கல்வி , நிருவாகம், அபிவிருத்தி பற்றிய அறிவுகளைப் பெற்றுக் கொள்வாா்கள். தமிழ் மொழி மூலம் முவர்  பயணமாகின்றனா். அதில் முஸ்லீம் அதிபராக  கல்கின்னைச்சோ்ந்தவரும் கல்வி முதுமாணி பெற்று தற்பொழுது நாரமல்ல, கிரி-பொல்காகய முஸ்லீம் வித்தியாலயத்தில் அதிபா் தரத்தில் கடமையாற்றும்  மொஹமட் சனுன் பாத்திமா சிபானவும் யாழ்ப்பாணத்தினைச் சோந்த அதிபா் வில்லியம் சாந்தக்குமாா் மன்னாரைச் சோந்த அதிபா் எமில்ராஜ் லோகுவும் சீனா செல்கின்றனா்.