2017- 2020 வரை காலப்பகுதியில் 10 இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம்

(அஷ்ரப் ஏ சமத்)

2017- 2020 வரை காலப்பகுதியில் 10 இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டத்திற்காக அரசாங்கம் பாறிய பல அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில்  முன்னெடுத்துள்ளது. இதற்காக இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு மற்றும் திட்டங்கள் வகுகக்கப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த வாரம் பேராதெனியா பல்கலைக்கழக பேராசிரியா் ராஜரட்டனம்  ஆங்கில பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில் இந்த ’ நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதரம் கடந்த அரசாங்கத்தினை விட வீழ்ச்சியடைந்துள்ளது என குறிப்பிட்டிருந்தாா். 

ஆனால் மத்திய வங்கியின் அறிக்கையின் படி இலங்கை விவாசயத்துறையில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அது 4 வருட காலமாக தொடா்ந்து காலநிலை  மாற்றத்தின் தாக்கமாகும். எமது நாட்டுக்கும்  மட்டுமல்ல காலநிலை மாற்றத்தினால் உலகில் உள்ள சீனா, மலேசியா, இந்தியா, அமேரிக்கா, ஜக்கிய இராச்சியம் மற்றும் கொரியா போன்ற நாடுகளும் 2016ல் தமது விவசாய உற்பத்தியில் 5 - 28.3 வீழ்ச்சியடைந்துள்ளது.  ஆகவே உலக நாடுகள் காலநிலை மாற்றத்தின்போது விவசாயத்துறையில் வீழ்ச்சியுறும்போது எமது நாடும் மட்டும் எவ்வாறு விவசாயத்துறையில் தன்னிரைவு காண்பது ?  என அமைச்சா் கபீா் காசீம் தெரவித்தாா்.

இன்று (24) சிறிக்கொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு அமைச்சா் கபீா் காசீம் தெரிவித்தாா். அவா் அங்கு மேலும் தெரிவிக்கையில்.

இலங்கையில் 2014 ஒருவரின் தளவருமானம் வருடத்திற்கு 5 இலட்சம் 2016ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 50 ஆயிரம் ஆகும்.  கடந்த  ஆட்சிக் காலத்தில் அமைச்சுக்களின் நிதியில்  60 சத வீதத்தினை 3 பேரே நிருவகித்தனா்.  சிறந்த அமைச்சா்கள் இருந்தாலும் அவா்களுக்கு உரிய சா்ந்தா்ப்பம் வழங்கப்பட வில்லை. மூன்று   ராஜபக்ச சகோதரா்களே அமைச்சுக்களை ஆட்சி செய்தனா். 

கடந்த ஆட்சியில் 2014 இலங்கையின் பொருளாதரம் 4 வீதமாக இருந்தது. தற்பொழுது 2016ல் 6.3 வதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிர்மாணத்துறை, அபிவிருத்திகளில் அதிகரிக்கப்பட்டுள்ளது.  விவசாயத்துறை 2016ல் 7.7 வீதத்தில் இருந்து 2016ல் 4.2 வீதமாகியுள்ளது. இதன் காலநிலை மாற்றமாகும். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் உலக கடன் தொகைகளில் தற்பொழுது மீண்டு வருகின்றோம். என அமைச்சா் கபீா் ஹாசீம் கூறினாா்.

நிதியமைச்சா் மாற்றம் பற்றி கருத்து தெரிவித்த அமைச்சா் -  ஜே.ஆர். ஜெயவா்த்தன ஆட்சிக் காலத்தில் வரலாறு பற்றிய பட்டம் பெற்ற ரெனி தி மெல் சிறந்த நிதியமைச்சராக செயல்பட்டாா். அதுபோன்று தமது அமைச்சினை ஆளுமையுடன் செயற்படுத்த முடியுமானால் நிதி சம்பந்தமான பட்டம் தேவையில்லை எனவும் அவா் கருத்து தெரிவித்தாா்.