கட்டாரில் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் ‘த விஷன் 2020’ நிகழ்வு

May 25, 20170 commentsமாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கட்டார் கிளை “த விஷன் 2020” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு அண்மையில் டோஹா எல் எட்டோலி ஹோட்டலில் இடம்பெற்றது. 

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் கட்டார் வாழ் பழைய மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில், கல்லூரி அதிபர் அஷ்ஷேய்க் சட்டத்தரணி ஜவாட் (நளீமி), பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், கட்டார் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த கல்லூரி அதிபர், “எமது பாடசாலை அடையவேண்டிய இலக்கு என்ன? இதற்காக குறுகிய மற்றும் நெடுங்கால திட்டங்கள் என்ன? வெளிநாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்களின் பங்களிப்பு என்ன? என்பதை தெளிவூட்டுவதற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்தேன். இதன் முதற்கட்டமாக கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் விஜயம் அமைந்தது.”- என்றார். 

நிகழ்வில் கலந்து கொண்ட பழைய மாணவர்ளுக்கு “த விஷன் 2020” தொடர்பில் சிறந்த விளக்கமொன்றினை இதன்போது வழங்கி கல்லூரி அதிபர், இத்திட்டத்தில் அவர்களை எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பது தொடர்பிலும் கலந்துரையாடினார். 

மேலும், ஸாஹிராக் கல்லூரி, பழைய மாணவர் சங்கம் கட்டார் கிளை வெளிநாடுகளில் நிறுவப்பட்ட முதலாவது கிளை என்பதை சுட்டிக்காட்டிய அதன் தலைவர் மொஹமட் லாபிர், பாடசாலை அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பழைய மாணவர் சங்க கட்டார் கிளை வழங்கும் எனவும் உறுதியளித்தார். 
Share this article :