அக்கரைபற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் "29வது" விளையாட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்"எம்.ஜே.எம்.சஜீத்
"அக்கரைபற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் "29வது" விளையாட்டு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்" இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சி.நிப்றாஸ் தலைமையில் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 
இதில் பிரதம அதிதியாக  "நஸார் ஹாஜியார்" கலந்து கொண்டார்.! 

பிரதம அதிதி தன் உரையில்

அக்கரைபற்றில் இருக்கும் "28"விளையாட்டு கழகங்களும் ஒரு சம்மேளனத்தின் குடையின் கீழ் ஒற்றுமையாக இயங்கும் இவ் நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! மேலும் இன்றைய இளைஞர்கள் நாளை எம் சமுகத்திற்கான தலைமைத்துவத்தை உருவாக்கும் சக்திகொண்டவர்கள் எனவே எமது எண்ணங்கள் எப்போதும் எமது மண்ணையும், எம் சமூகத்தையும் நேசிக்கும் சிந்தனை இருக்க வேண்டும்! 

பதவி, அதிகாரம் இறைவன் தருபவன் எனவே நாம் நம் சிந்தனைகளை சரியாக செயல் படுத்த வேண்டும்! இவ் மைதானம் பற்றி ஒரு வரலாறு இருக்கு  அந்த வகையில் இந்த மைதானத்தை உருவாக்கி இதற்கு இன்னும் உயிர் கொடுக்க நினைக்கும் முன்னால் அமைச்சர் அதாஉல்லாஹ் வையும் நாம் மறக்க முடியாது என்று தனதுரையில் குறிப்பிட்டார்.
Powered by Blogger.