லிபியாவில் இருந்து இத்தாலிக்கு சென்ற படகு கவிழ்ந்ததில் 30 பேர் பலிலிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச்சென்ற படகொன்று கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் பலியாகியுள்ளதாக லிபிய தகவல்கள் தெரிவித்துள்ளன.

வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக நாள்தோறும் மக்கள் இவ்வாறு சட்டவிராத கடற்பயணங்களில் ஈடுபட்டு வருவதோடு உயிராபத்துக்களையும் சந்திக்கின்றனர்.

இந்த நிலையில்,லிபிய கடல் எல்லையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நேற்றைய தினம் படகொன்றில் சுமார் 200 பேர் மத்திய தரைக்கடல் ஊடாக ஐரோப்பிய நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்த வேளை படகு கவிழ்ந்துள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதன்போது 3 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்,ஏனையோரை மீட்கும் பணியில் இத்தாலிய கடற்படை ஈடுபட்டு வருவதாகவும் வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

LIVE360
Powered by Blogger.