இறக்காமம் றோயல் கல்லூரி 3 மாடிக்கட்டிடத்திற்கு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு
(சட்டத்தரணி பாறுக் சாஹிப்,இறக்காமம்) சட்டத்தரணி பாறூக் சாஹிப் தலைமையில் இறக்காமம் மாயக்கல்லிமலை சிலை விவகாரக் குழு 06.05.2017 அன்று கௌரவ மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களைச் சந்தித்து சிலை விவகாரம் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தனர். இதன் போது அமைச்சர் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பேசி தீர்க்கமான முடிவுக்கு வருவோம் என நம்பிக்கை வெளியிட்டார் .

மேலும் அமைச்சராலேயே ஊருக்கு ஏதும் தேவைகள் உள்ளதா? உங்களை வெறும் கையுடன் அனுப்ப முடியாது ஏதாவது கேழுங்கள் என்று அமைச்சரே அடம்பிடித்துக் கேட்டதாகவும் அப்போது சட்டத்தரணி அவர்களால் 2 கோரிக்கைகள் குழுவின் அனுமதியோடு முன்வைக்கப்பட்டது. 01. இறக்காமம் றோயல் கல்லூரிக்கான 3 மாடிக் கட்டிடம் 02. இறக்காமம் பிரதான வீதி காபட் இடல் இதன் போது 3 மாடிக் கட்டிடத்துக்கு முதல் கட்டம் 50 இலட்சம் தருகிறேன் என அமைச்சரால் ஏற்கனவே அக்குழுவிற்கு வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்று இறக்காமம் றோயல் ஜூனிய கொலிஜ் மூன்று மாடிக் கட்டிடத்திற்கு முதல் கட்ட 50 இலட்சம் நிதி ஒதுக்கியதை உறுதிப்படுத்தும் விதமாக அம்பாரை அரசாங்க அதிபருக்கு முகவரியிட்டு கடிதம் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள விசேட அம்சம் ஒரு வாக்கு கூட அளிக்காத இறக்காமம் மக்களின் கல்விக்காக உதவி செய்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு சட்டத்தரணி பாறூக் சாஹிப் இறக்காமம் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்தார்.