ஆப்பிரிக்க நாடான சாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களில் 40 பேர் வரையில் பலிமத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் (Chad) மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 40 பேர் வரையில் கொல்லப்பட்டனர். சாட் நாட்டில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் திடீரென சாட் ஏரிப்பகுதியில் ராணுவத் தளம் அருகே நடத்திய தாக்குதலில் 9 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் இன்று அதிகாலை இடம்பெற்றதாக அந்த நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாட் ஏரி எனும் பகுதி தற்போது தீவிரவாதிகளின் வசமாகிவருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக நீடிக்கும் யுத்தத்தால் இதுவரை மொத்தம் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.