மோடிக்கு இலங்கையில் 6 ஆயிரம் காவற்துறை படையணியினர் பாதுகாப்புஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பொருட்டு 6 ஆயிரம் காவற்துறை படையணியினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதனை தெரிவித்தார்.

காவற்துறையினர் விசேட படையணி மற்றும் விசேட பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவற்துறை அதிகாரிகளும் இந்த படையணில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் விசாக பூரணை தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் இலங்கை வருகிறார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், எவ்விதமான நாசகாரியங்களுக்கும் இடமளிக்க போவதில்லை என காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர பி.டி.ஐ செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.