துபாய் சாலை விபத்தில் 7 பேர் பலி 35 பேர் காயம் !துபையில் நேற்று காலை 8 மணியளவில் அல் ஜெலிஸில் (Al Jelis Street) நடைபெற்ற சாலை விபத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் 35 பேர் காயமடைந்தனர்.

டிரைவர் உட்பட 41 பேர் பயணம் செய்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரில் வந்து கொண்டிருந்த டிரக் மீது மோதியதால் இக்கோர விபத்து நிகழ்ந்தது.

மீட்பு நடவடிக்கை ஈடுபட்ட போலீஸார் பேருந்திற்குள் சிக்கிக் கொண்டிருந்த 22 தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.