அட்டாளைச்சேனை மாணவனின் இஸ்லாமிய கண்டுபிடிப்புஅட்டாளைச்சேனை 5ம் பிரிவு மஸீதா மாவத்தையைச் சேர்ந்த தரம் 7 ல் கல்வி கற்கும் கையூம் நப்லி எனும் மாணவன் இஸ்லாமிய முறைப்படி இருவர் இல்லாமல் ஒருவர் மாத்திரம் கோழி மற்றும் பறவைகளை அறுப்பதற்கான எழிய முறையிலான இயந்திர மொன்றை கண்டு பிடித்துள்ளார்.

 கோழிப் பன்னைகளை வைத்துள்ளவர்களுக்கும், கடை வைத்து இறைச்சி விற்பனை செய்பவர்களுக்கும் இம் மாணவனின் கண்டு பிடிப்பு பெரும் நன்மை பயத்துள்ளது. மாணவன் நப்லியின் கண்டு பிடிப்பைப் பாராட்டுவதுடன் எதிர்காலத்தில் புதிய நவீன கண்டுபிடிப்புக்களை கண்டு பிடிப்பதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.