நேற்றும் ஒரு தீக்கிரை சம்பவம் ஹார்வெயார் வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தது

May 24, 20170 commentsபத்தேகம நகரிலுள்ள ஹார்வெயார் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையிர் வருகை தந்து தீயினை  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். 

 தீயினால் எந்த  உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என அறியப்படுகிறது. குறித்த வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட அனைத்து  பொருட்களும் சேதம் அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரவித்தார்.


நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளர் விபரம் இதுவரை அறிய முடியவில்லை. மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Share this article :