சென்னை சில்க்ஸ் கடையில் தீ விபத்து


சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கடைக்குள் 10 பேர் சிக்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஏழு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
குறுகிய சாலையில் கடை அமைந்திருப்பதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தரைத்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வருகிறது, மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் "சென்னை சில்க்ஸ்" அமைந்துள்ள இடம் அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.