இம்மாதத்தில் சகவாழ்வும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஏற்பட இறைவனை பிராத்திப்போம்இம்மாதத்தில் நாட்டில் சகவாழ்வும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஏற்பட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் ரமழான் மாதத்தை வரவேற்கும் முகமாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அருள் நிறைந்த ரமழானே வருக ….

அருள் மிகுந்த இம்மாதம் நம் ஈமானை வலுவூட்ட வந்திருக்கின்றது. அதில் அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டு அவனது மன்னிப்பை நாம் அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும்.பொறுமை, ஒற்றுமை உள்ளிட்ட பெரும் நற்பண்புகளை நாம் அதில் அணிகலன்களாக்கிக் கொள்ள வேண்டும்.இப் பாக்கியத்தை அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவருக்கும்  வழங்கி அருள்வானாக!

மேலும் அருள்மிகு இம்மாதத்தில் நாட்டில் சகவாழ்வும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஏற்பட்டு எமது வணக்க வழிபாடுகளை முன்னெடுக்க  அமைதியான  சூழலை ஏற்படுத்த எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்போம்.

அத்துடன் எமது மக்கள்  என்றும் நலம் வாழ ஏக இறைவனைப் பிரார்த்திபோம். எமது வாழ்வு அல்லாஹ்வின் திருப் பொருத்தம் கொண்டதாக  அமைய எமக்கு அவன் துணைபுரிவானாக!எமது கட்டுப்பாடான வாழ்வை அவன் பொருந்திக் கொள்வானாகநரக விடுதலை பெற்றவர்களோடு அல்லாஹ் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக!

குல்லு ஆமின் வஅன்தும் பிகைர்
தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்

ஊடகப்பிரிவு

Powered by Blogger.