பௌத்த முஸ்லிம் உறவை சீர்குலைக்காதீர்கள்; லியாக்கத் அலி வேண்டுகோள்இலங்கைக்கும் முஸ்லிம்களுக்குமான தொடர்பு இன்று நேற்று உருவானது அல்ல, இது இலங்கையில் எப்போது ஆள்நடமாட்டம் இருந்ததோ அன்று தொடக்கம் முஸ்லிம்கள் அதாவது இஸ்லாத்தை ஏற்றவர்கள் வந்து போன இடம் தங்கிய இடம், வாழ்ந்த இடம், வியாபாரம் செய்த இடம் என சமூக சிந்தனையாளரும் சிலோன் முஸ்லிம் ஊடக வலயமைப்பின் ஆலோசகருமான லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.,

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இது குறிப்பிடப்பட்டுள்ளது,

செரண்திப் தீவு என அரேபிய முஸ்லிம்களால் வர்ணிக்கப்பட்ட எமது இலங்கை நாடு முஸ்லிம்கள் அதிகம் நேசித்த இடம் அது மாத்திரமின்றி உலகின் முதல் மனிதன் ஆதம் அலை அவர்கள் வந்திறங்கிய இடம் என்றும் ஒரு விடயமிருக்கிறது, ஆக முஸ்லிம்களுக்கும் இலங்கைக்குமான தொடர்பு நீண்ட வரலாறு கொண்டது. இவை ஆவணமாக இருந்தாலும் அதனை நுால்வடிவில் கொண்டுவரவில்லை என்ற ஒரு கவலை இருந்து வருகிறது.

வேடுவர்கள் இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் இப்பகுதிக்கு வந்த அரபிய முஸ்லிம்கள் வேடுகவர்களுக்கு வியாபாரத்தையும், கப்பல் கட்டுதலயும் பயிற்று வித்தனர் அன்று இஸ்லாத்தை பரப்பவில்லை, பலாத்தகாரமாக இஸ்லாம் பரவக்கூடாது என்ற நோக்கமே அவர்களுக்கு இருந்தது, அதற்கு பிற்பாடு பௌத்தம் இலங்கைக்குள் வந்த பிறகும் முஸ்லிம்கள் பொளத்தர்களுடன் பண்டைய உறவுகளை பேணினர், பௌத்த மன்னர்களுக்கு பாதுகாப்பு, வியாபார யுக்தி, அரசியல் என்பவற்றை கற்றுக்கொடுத்தனர் இதற்கு பல சான்றுகள் உண்டு, வரலாறு இப்படியிருக்கையில் முஸ்லிம்களை இன்று விரோதியாக பார்க்கப்படுகிறது இது ஏன்?

முஸ்லிம்களின் ஒற்றுமையில் அசடு, மார்க்கத்தை பேணுதலில் மந்தம், மற்றைய மத்தவர்களை பலாத்காரமாக வம்புக்கு இழுத்தல் சமூகத்தை கூறுபோடும் அமைப்புக்களின் தோற்றம், அரசியல்வாதிகளின் வங்குரோத்து தனம் என ஆயிரம் காரணங்கள் உள்ளது.

தயவு செய்து பௌத்த முஸ்லிம் உறவுகைள சீர்குலைக்காதீர்கள், இஸ்லாம் சமாதானத்தை அதிகம் விரும்பும் மார்க்கம் அச் சமாதானம் இலங்கை யெங்கும் வியாபிக்க வேண்டும். என்றார்.