ஞானசார விரைவில் இஸ்லாத்தை ஏற்பார் இன்சா அல்லாஹ்; பஹத் ஏ.மஜீத் கருத்துபொதுபலசேனா அமைப்பும் அதன் முக்கியஸ்தர் ஞானசாரவும் கடந்த அரசிலும் இந்த அரசிலும் தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டும் வஞ்சித்து கொண்டும் இருக்கின்றார், புனித இஸ்லாத்தையும் இறைவனையும் இழிவாகவும் பேசுகிறார். இப்படி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியவர்களின் இறுதி நிலை வரலாறுகளின் அடிப்படையில் ஒன்றில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பர் இல்லயேல் முடிவு மிகக் கேவலமாக இருக்கும் என சிலோன் முஸ்லிம் பிரதானி பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் மத்திய கிழக்கு இலங்கை முஸ்லிம்களை சிலோன் முஸ்லிம் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்,

மேலும் உரையாற்றிய பஹத் ஏ.மஜீத்,

இஸ்லாம் பரிபூரண மார்க்கம், சகவாழ்வு, சமாதானம், ஒழுக்கம், உண்மை, நேர்மை என்பவற்றால் வளர்க்கப்பட்டது, இஸ்லாத்தை இந்த உலகிற்கு பரப்பிய இறைத்துாதர்கள் மிகவும் அல்லல் பட்டனர், வஞ்சிக்கப்பட்டனர், அப்படித்தான் இறுதி துாதர் முஹம்மத் நபியவர்களும், அவர்களை பின்பற்றும் நாம் நிறைய விடயங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. உமர் (றழி) அவர்கள் நபியவர்களை வாளை எடுத்து வெட்டு வந்தவர் இறுதியில் கலீபா ஆனார், இன்னும் பலர் மிகக்கேவலாமாக பேசினர் பின்னர் அனைவரும் சுவர்க்க வாசிகள் ஆனர். அனைத்தும் நபியவர்களின் பொறுமையாலும் நடத்தையாலுமே.

ஆனால் இன்று எங்கள் நடத்தைகள் வாழ்க்கை முறைகள் இஸ்லாமியத்தை விட்டு அகன்று சென்றுவிட்டது, ஹிஜ்ரதுக்கு முன்னர் அண்ணலார் எதைச் செய்தார்களோ அதனை செய்ய வேண்டும், இனவாதிகளை எங்கள் நடத்தைகளாலும் வார்த்தைகளாலும் மாற்ற வேண்டும். இன்று அதிகம் முஸ்லிம்கள் பற்றி அறியாமையிலே எங்கள் மீது சீறிப்பாய்கின்றனர். இஸ்லாத்தை அதன் துாய இலகு வழியில் அவர்களுக்கு சொல்ல வேண்டும். அவர்களின் மொழியில் அண்ணலாரின் பண்புகளை உரக்க உரைக்க வேண்டும். ஞானசார விதிவிலக்கல்ல.

ஞானசார தேரரை நான் ஒருமுறை சந்தித்த போது அவர் என்னிடம் சொன்னார், நான் முஸ்லிம்களின் நண்பன் எனக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றிய அதிக அறிவு உள்ளது, நான் பிரச்சினை படுவது இனவாதம் கக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் அமைப்புகள் உடனுமே என்றார், இந்த நாட்டில் தேரவாத புத்த மதத்தை பரப்ப நான் பாடுபடுகிறேன், எனக்கு என்மதம் முக்கியம் அதனை உலகறிய செய்ய வேண்டும். முஸ்லிம் மக்கள் எனக்கு விரோதிகள் அல்லர் நான் அதிகம் கோபப்படுவது தவ்ஹீத் ஜமாஅத் உடனும் றிசாத் பதியுதீன் உடனுமே என்றார் காரணம் அவர் காட்டை அழிக்கிறார், தவ்ஹீத் எங்கள் பிள்ளைகள மதம் மாற்றுகின்றனர் என்றார்.

இப்படி இந்த கலந்துரையாடல் காரசாரமாக நீண்டாலும், ஞானசார ஒரு ஏவுகோல்தான் அவரை ஏவி விடுவுார்தான் சூத்திரதாரிகள் என்பதை புரிந்து கொண்டேன், நான் சொன்னேன் இன்னும் நன்றாக படியுங்கள், நபியவர்கள் காலம், கலீபாக்கள் காலம், உமையாக்கள் காலம் என்பவற்றை படியுங்கள். இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் நீங்களும் சத்தியத்தை ஏற்பீர்கள் என்றேன். அவர் கோபத்துடன் சிரித்தார்.

பொதுபலநேனா பற்றிய முழுவிவரக் கட்டுரையினை யாத்து அவரிடம் சிங்களத்தில் மொழிபெயர்த்து கொடுத்தேன், அப்போது அவர் முஸ்லிம்கள் கெட்டிக்காரர்கள் என்றார். அந்த கட்டுரையின் லின்க் (தமிழ் வடிவம்) http://fahathofficialblog.blogspot.com/2016/12/blog-post_9.html

இறைவன் அவருக்கு ஹிதாயத் வழங்க வேண்டும், அவர் இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் இஸ்லத்தை ஏற்பார், ஏற்க வேண்டும். என்றார் பஹத் ஏ.மஜீத்