ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியால காணிக்கொள்வனவுக்கு உதவிடுவோம்!(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு ஓட்டமாவடி 3ஆம் வட்டாரத்தில் அமைத்துள்ள ஒரு பாடசாலை தான் ஹிஜ்ரா வித்தியாலயம். இப்பாடசாலை இப்பிரதேச ஏழை சிறுவர்களின் கல்வி நிலமையை கருத்தில் கொண்டு 1980 ஆம் ஆண்டு ஒரு ஆரம்ப பாடசாலையாக 79’x80’அளவுள்ள காணி ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது இப்பாடசாலையின் வளர்ச்சி அதன் பௌதீக வளங்களை விரிவு படுத்தல், மாணவர்களின் தொகை அதிகரிப்பு இடப்பற்றாகுறை,அன்றாடம் மாணவர்கள் எதிர்நோக்கும் இட நெருக்கடி மற்றும் சுகாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பாடசாலையின் அருகில் உள்ள காணியை வாங்குவது என்று பாடசாலை நிருவாகமும்,அபிவிருத்திகுழு,பழைய மாணவர் சங்கம் ஆகியொன தீர்மானித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் காணிக்கொள்வனவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள காணியின் விலை ரூபா.35 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியினை 06ஆம் மாதம் 30ம் 2017 திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்ற உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறுகிய காலம் என்பதால் பல்வேறு பட்ட முயற்சிகளில் காணி கொள்வனவு குழு ஈடுபட்டு வருகின்றது.

அன்பின் சகோதர,சகோதரிகளே! நீங்களும் இந்ந புனித ரமழான் மாதத்தில் தங்களுடைய மறுமை வாழ்வுக்காக நிரந்தரமான தர்மம் செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்களாக இருப்பின் இப்பாடசாலையின் காணி கௌ;வனவுக்கு உங்களாலும் உதவிட முடியும்.

இக்காணிக்கான நிதி சேகரிப்பினை இலகுபடுத்த 10.52 பேர்ச்சஸ் உடைய இக்காணிகளை 2865 ஆயிரம் சதுர அடி காணித் துண்டுகளாக பிரித்துள்ளனர் ஒரு சதுர அடி காணியின் விலை ரூபா.1250 (ஆயிரத்து இருநூற்றி ஐம்பது மாத்திரமே) ஆகும் இப்பாடசாலையினதும் ஏழை மாணவர்களினதும் கல்வி நிலமைகளை கருத்தில் கொண்டு உங்களால் இயலுமான சதுர அடி காணித்துண்டுகளை கொள்வனவு செய்து உதவி புரியுமாறு பாடசாலை காணிக்கொள்வனவு குழு கேட்டுக்கொள்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு:-

காணிக் கொள்வனவு குழு

தலைவர்:- ஜனாப் கே.எல்.எம்.இர்சாத் (முகாமையாளர் இலங்கை வங்கி) தலைவர்,மஸ்ஜிதுல் ஹைர்
செயலாளர்:- எச்.எம்.தௌபீக்
பொருளாளர்:- அல்-ஹாஜ்.ஏ.எல்.எம்.முஸ்தபா (சிறாஜி)
பேஸ் இமாம்,ஓட்டமாவடி முகைதீன் பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயல்
அமானா வங்கி கணக்கு இலக்கம் :- 0110289438001
தொலைபேசி இலக்கம்:- 0776104595/0755537393

மேற் குறிந்த நபர்களை தொடர்பு கொண்டு நேரடியாகவும் வங்கியிலும் வைப்பிளிட்டு உதவ முடியும்