பலஸ்தீன சிறை கைதிகளுக்கு ஆதரவாக கொழும்பில் கையெழுத்து 
 
பலஸ்தீன சிறைக்கைதிகளின் மனிதாபிமான போராட்டத்துக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறு பலஸ்தீன தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இஸ்ரேலிய சிறைகளில் தடத்து வைக்கப்பட்டுள்ள 1,500 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களின்  உண்ணாவிரத போராட்டம் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 
 
இதனை நினைவு படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள பலஸ்தீன தூதரகத்தில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நாளையும் (03) நாளை மருதினமும் (04) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், கொழும்பு 07, இலக்கம் 110/10 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகத்தில் கையொப்ப புத்தகம் வைக்கப்படும் என தூதரகம் அறிவித்துள்ளது.  

இலங்கையிலுள்ள பலஸ்தீன ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்துகொண்டு இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்