சிலோன் முஸ்லிம் செய்திகளை மொழிபெயர்த்து வாசிக்கும் ஞானசார தேரர்!

கிராபிக் படம்


இலங்கை முஸ்லிம் தனித்துவ செய்தி மற்றும் தகவல் களஞ்சியமான சிலோன் முஸ்லிம் இணையப்பக்கத்தில் வெளியாகும் செய்திகளை சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து தினமும் பார்க்கிறார் ஞானசார,

 அண்மையில் மாயக்கல்லி சிலை விவகாரம் தொடர்பில் அதிக கவனம ்செலுத்தி செய்தி வெளியிட்டு பல சிக்கல்களை எதிர்கொண்ட எமது செய்தி தளத்தை ஒரு சில இனைவாத இணையங்கள் (Colombo Today,Apen News,BBSnews) திரிவு படுத்தி எழுதியிருந்தன.

இதனையடுத்து சிலோன் முஸ்லிம் இணையத்தளத்தில் வரும் செய்திகளை மொழிபெயர்த்து வாசிப்பதற்கு தருமாறு பொதுபலசேனா ஊடகப்பிரிவிற்கு பணித்துள்ளார்.

மாயக்கல்லி சிலை விவகாரம் தொடர்பாக எமது செய்திப்பிரிவு ஞானசாரவிடம் கருத்துக்களை கேட்டபோது, நான் சிலோன் முஸ்லிம் இணையத்தளத்தை பின்தொடருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்த தடைவரினும் எமது பயணம் தொடரும், யார் எச்சரித்தாலும் அச்சுறுத்தினாலும் எமது முஸ்லிம் ஊடகப்பணி தொடரும்.