ஞானசாரவை அல்லாஹ்விடம் பாரம் கொடுங்கள்; இஸ்லாம் சமாதானத்திற்கான வழியே!ஞானசார தேரர் இன்று இலங்கை முஸ்லிம்கள் அதிகம் அறிந்து வைத்துள்ள ஒரு நபர், இவர் சமூக வலைத்தளங்கள் மூலமே பிரமானார் விசம கருத்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக அள்ளி வீசினார் சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக துாண்டிவிட்டார் போராட்டங்கள் செய்தார் பல வெற்றிகளையும் கண்டார், ஞானசார மஹிந்தவின் விருந்தாளி என்றனர் பின்னர் ரணிலின் விருந்தாளி என்றனர், மைத்திரின் ஆதரவில் இயங்குகிறார் என்றனர், அசின் விராதின் திட்டம் என்றனர் பலகோணங்களில் கருத்துக்கள் வெளியிடப்படுகிறது,

ஊடகங்கள் அதிகம் ஞானசவாரவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, அவர் எங்கு சென்றாலும் பின்னால் ஊடகங்களும் செல்கிறது, எந்த செய்தி வரக்கூடாதோ அது உடன் வருகிறது, ஞானசார விசமக் கருத்துக்களை கக்கும்போது அதிகாரிகள், அமைச்சர்கள் வேடிக்கை பார்க்கின்றனர், முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றார், ஹலாலை பிடுங்கி எடுத்தார் எம் சகோதரனை அளுத்கமவில் கொன்றார்,எம் குடும்பங்களை தர்கா நகரில் சீரழித்தார் அடுக்கடுக்காய் ராஜபஷ அரசில் அட்டூழியம் புரிந்த இந்த ஞானசார தேர்தலும் கேட்டார் படுதோல்வியடைந்தார், பின்னரும் இவரின் ஆட்டம் ஓயவில்லை.

பிரச்சினைகளை உருவாக்கினார், பிரச்சினைகளை விலைகொடுத்து வாங்கினார் பங்குக்கு சிங்கள இராவய, இராவாணா பலய போன்ற அமைப்புக்களை கூட்டாளியாக்கினார் இவ்வளவும் தனிமனிதனாக இருக்கும் ஞானசார எனும் தேரரால் எப்படி முடியும்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லாத போது அந்நியர்களை கொண்டு முஸ்லிம்களை இறைவன் அழிப்பான்

இது இறைவாக்கு இந்த நியதியே இன்று நடந்தேறிக்கொண்டிருக்கிறது, நாங்கள் பெரும்பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம், ஒற்றுமை என்ற பேச்சுக்கே எம்மிடத்தில் இடமில்லை, அப்படி இருக்கையில் இறைகோபம் எம்மை சூழாதா? புனித ரமழான் வருகிறது, இன்னும் ஏன் தயக்கம்? முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும், ஒரு கூடையின் கீழ் வரவேண்டும், மார்க்கத்தை அச்சொட்டாக பின்பற்ற வேண்டும். நாம் முஸ்லிமாக இருந்தால் எம்மை அந்நியர்கள் சீண்ட மாட்டார்கள்.

நாம் ஞானசாரவை அல்லாஹ்விடம் பாரம் கொடுப்போம், தொழுவோம், துஆ கேட்போம். அண்ணலாரின் வாழ்க்கையை நம்வாழ்க்கையாக்குவோம்.

ஞானசார அல்ல எந்த சாரப்பாம்புகளின் விசமும் எம்மை சீண்டாது,

பஹத் ஏ.மஜீத்
பிரதம ஆசிரியர்