மஹிந்தவின் சகோதரி இன்று காலமானார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியான காந்தினி சித்ரானி ராஜபக்ஷ ரணவக்க காலமாகியுள்ளார்.

தனது 58 ஆவது வயதில் இன்று அதிகாலை அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலயே அவர் காலமாகியுள்ளார்.

பூதவுடல் நுகேகொட – எம்புல்தெனிய பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்கா வைக்கப்படவுள்ள நிலையில், இறுதிக் கிரியை நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.