May 8, 2017

ஆபத்தில் உதவுபவன் தான் உண்மையான உறவு(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலிப் பிரதேச முஸ்லிம் மக்களை விரைவாகக் குடியேற்ற வேண்டும் என்ற ஆதங்கம் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்குஉண்டு இப்பிரதேசமக்களில் 85வீதமானோர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவானவர்கள். வன்னிமாவட்டவாக்குவங்கிகளில் முசலிப்பிரதேசம் மிகவும் முக்கியமானது.

முசலிப்பிரதேசசபையைஒப்படைத்தமை,பாராளுமன்றஉறுப்பினர்கள் ,மாகாணசபைஉறுப்பினர்கள் போன்றோரைத் தெரிவுசெய்வதற்கு இவர்கள் அளித்தஆதரவுஎன்பனகாலத்தால் மறக்கமுடியாதவை இது ஒருபக்கம் ஆகும். மறுபக்கம் தமக்கு ஆதரவுதரவில்லை. தமது கட்சி வேட்பாளர்களை தோல்வி அடையச் செய்து விட்டனர் என்ற வெறுப்பும் குரோதமும் இன்னொரு பக்கம் இதன் பெறுபேறே இம்மக்களின் துன்பதுயரங்களை தூர நின்று பார்த்துச் சிரித்தல்,ஊடகங்கள் வாயிலாக வில்பத்து ஒரு நாடகம் இதில் மக்களுக்குப் பிரச்சினை இல்லை எனக்கூறியமை. இம்  மக்களுக்கு சிறிய அபிவிருத்தி கூடச் செய்யாமை போன்றவற்றை அரசியலுக்கு அப்பால் நின்றுசிந்திக்கும் முசலிப்பிரதேசபுத்திஜீவியானஎவனுக்கும் புரியும்.

எதிரியின் எதிரி நண்பன் என்பார்.இதற்கொப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீயுதீனுக்கும், முசலிமக்களுக்கும் எதிராக பலசேனா, இராவணபலய போன்றன ஊடகப்போர் தொடுத்தபோது,அவர்களின் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாகவும் , நேரடியாகவும் ஆதரவு வழங்கியமை எல்லாம் குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியின் நிலைமையை தோலுரிக்கின்றன. பலசேனா'அமைச்சர் றிசாத் வில்பத்துக்காட்டைஅழித்து முஸ்லிம் மக்களைகுடியமர்த்துகிறார் என்றது.இதே வேளை குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சர் வில்பத்துக் காட்டைஅழித்து பல நூறு ஏக்கர் காணியில் வாழைத்தோட்டம் வைத்துள்ளார்  என்ற பொய்ப் புரளியைக் கிழப்பினார்.'

இவ்விரு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எதிரியின் எதிரி நண்பன் எனும் நேர்கோட்டில் பயணிப்பதை அறிய முடிகிறது.
குறிப்பிட்ட முஸ்லிம் கட்சிஉண்மை நிலையை அறிந்திருந்தும் முசலிமக்களுக்கும், அமைச்சர் றிசாதிற்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் திடமாக இருந்துள்ளது. வில்பத்து விடயத்தில் முசலிமக்களுக்கு ஆதரவாக இவர்களால் ஒரு கண்டன அறிக்கைகூட விடமுடியாமல் போனது. அறிக்கைவிட்டால் வன்னி அமைச்சரின் செல்வாக்கு அதிகரித்து விடும் என்ற பயத்தில் உள்ளனர்.

அதர்மம் தோற்றது தர்மம்வென்றது. வில்பத்து வனம் அழிக்கப்படவில்லை என்ற செய்தி நிதர்சனமானது. இதன் பின்பு தான் வில்பத்து மன்னாரில் இல்லை என்ற உண்மை நிலை வெளியானது. கொக்கரித்தோர் அடங்கினர்.அமைச்சர்களான ராஜிதசேனாரத்ன,சம்பிகரணவக்க,ரஞ்சன் ராமநாயக,அனுரகுமாரதிசாநாயக பா.உ.போன்றோர்.உரத்துச் சொல்லி விட்டனர் வில்பத்து அழிக்கப்படவில்லை என்று.

ஆபத்தில் உதவுபவன்தான் உண்மையான உறவு.எட்ட நின்று பார்ப்பதும் தேர்தல் வரும்போது கிட்ட வந்து உறவு கொள்வதும் பரிவாரங்களுடன் வந்து சினிமாப்பாடல் சாயலில் பாடலைஒலிபரப்புவதும் சிலமாயைகளை விதைத்து மக்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது. வில்பத்தில் மூக்குடைபட்ட இனவாதக்குழுக்கள்மன்னாரில் உள்ள பிரகடணப்படுத்தப்படாத காடுகளை வர்த்தமானி மூலம் பிரகடணப்படுத்துவதில் வெற்றிபெற்றுள்ளனர்.

மாவில்,வெப்பல்,கல்லாறுவனப்பிரகடணம் தொடர்பாக இப்பிரதேசமக்களிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்வில்லை தமது கருத்தைத் தெரிவிக்க எவ்வித அவகாசமும் கொடுக்கப்படவில்லை.
மஹிந்தஅரசின் காலத்தில் ஜி.பி.ஆர்.எஸ். தொழினுட்பம் மூலம் முஸ்லிம்களின் பூர்வீகப் பிரதேசங்கள் வனமாகப் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளன.  இதன் தவறுகள் உணரப்பட்டு இப்பிரகடணம் இரத்துச்செய்யப்பட வேண்டும் என்ற கோசம் மேலோங்கி ஒலித்துக் கொண்டிருந்த வேளையில் வெளியாகியுள்ள புதிய வனப்பிரகடனம் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போலுள்ளது.

மறிச்சுக்கட்டி,பாலைக்குழி,கரடிக்குழி,கொண்டச்சி, அகத்திமுறிப்பு போன்றபிரதேசங்கள் நேரடியாகப் பாதிக்கப்படவாய்ப்புள்ளது. இந்த அநீதிக்கு எதிரான சாத்வீகப் போராட்டம் மறிச்சுக்கட்டியில் ஒரு மாதத்திற்குமேலாக இடம்பெற்றுவருகிறது.இதற்கானஆதரவுநாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.கொழும்பு,கண்டி,குருநாகல்,புத்தளம்,கல்முனை,ஓட்டமாவடி,போன்ற பிரதேசங்களில் இருந்து மக்கள் சென்று ஆதரவு வழங்கியதைக் காணமுடிகிறது.

மன்னார் மாவட்ட ஆயர் தலைமையிலான குழுவும் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது. இலங்கை தௌஹீத் ஜமாஅத்தும் தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமைச்சர் றிசாத் இப்பிரச்சினையை யார்யார் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமோ? அங்கெல்லாம் கொண்டு சென்று விட்டு நல்ல செய்தியை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கின்றார். இவ்விடயத்தை ஆய்வு செய்யவும் ஒரு குழு நியமிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இதேவேளை ஒருமாற்று அரசியல் கட்சி ஜனாதிபதியின் செயலாளரை அழைத்து வந்து வனப்பிரகடன வர்த்தமானியை இரத்துச் செய்கிறோம் என்ற கோசத்துடன் அண்மையில் முசலிக்கு விஜயம் செய்தனர். இவர்களின் போலி நாடகத்தை விளங்கிக் கொண்ட மக்கள் இவர்களை தொடர்ந்து செல்லவிடாமல்  வீதியிலே மறித்துக்கட்டினர்; .இன்றும் அம்மக்களோடு இரவுபகல் பாராமல் உண்மையான உறவுகள் ,போராளிகள் களத்தில் நிற்பதைபிரதேசமக்கள் நன்கு அறிவர். மாயைகள் மறையும் உண்மைகள் உறங்காது.

;
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post