எதிர்வரும் றமழானில் பேரீச்சம் பழத்தை புறக்கணிப்போம்; பசீர் சேகு பகிரங்க மடல்பேரீத்தம் பழத்தை மதித்து பேரினவாதத்தை மிதித்தல் - இது முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவுதின் பேஸ்புக் பதிவு


பேரீத்தம் பழம் இல்லாது நோன்பு துறந்தால் நோன்பு செல்லாதா என்ன?
நமது சமூகம் போராட வல்லமையுள்ள மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகமாக இருந்தால்...
நமது முஸ்லிம் மக்கள் அழ்ழாஹ்வின் ஆட்சியைத் தவிர வேறு எந்த அதிகாரத்துக்கும் அச்சமடையாத உண்மை முஸ்லிம் சமூகமாக இருந்தால்...
எதிர்வரும் றமழான் காலத்தில் பேரீத்தம் பழங்களைக் கொள்வனவு செய்வதில்லை என்றும், எந்தவொரு இலங்கை முஸ்லிம் பிரஜையோ, அமைப்புகளோ பேரீத்தம் பழத்தை அல்ல சீஸ் பிஸ்கற்றைக் கொண்டே இப்தார் செய்வோம் என்றும் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.
ஒட்டு மொத்த சமூகமும் இம்தீர்மானத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்திக் காட்டினால் நமது சமூகம் அரசியல், சமூக, மார்க்க ரீதியாக வென்றுவிட்டது என்று நிரூபணமாகும்.