இஸ்ரேலை ஆத்திரமூட்டிய டிரம்பின் வார்த்தைகள்


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் சென்றுள்ளார்.
பல்வேறு போராட்டங்களில் கொல்லப்பட்ட யூதர்களை நினைகூறும்  நினைவிடத்தில், உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் சில வாசகங்களை நினைவேட்டில் பதிந்துள்ளதாக  இஸ்ரேல் இராஜதந்திரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எதோ இன்பச்சுற்றுலா சென்று அனுபவித்ததைப் போன்ற தொணியில் ட்ரம்ப் இந்த வாசகங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
என் நண்பர்களுடன் இங்கே வந்ததற்கு பெருமைப்படுகிறேன். இது அற்புதமாக உள்ளது, இதை நான் மறக்கவே மாட்டேன்’  என்பது டிரம்ப் அதில் எழுதிய வாசகங்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.