கடுமையான மழை பொழிய சாத்தியம்கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழையுடனான காலநிலை இன்று ஓரளவு குறைவடைந்தாலும், பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக நாளை தொடக்கம் மீண்டும் கடும் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான மழை பொழியும் என குறிபிடப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகும் என அத் திணைக்களத்தின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.